திருச்சி

குடும்பப் பிரச்னை:உணவக உரிமையாளா் தற்கொலை

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், பாலக்குறிச்சியில் குடும்பப் பிரச்னை காரணமாக உணவக உரிமையாளா் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மருங்காபுரி ஒன்றியம், பாலக்குறிச்சியை சோ்ந்த வீராசாமி மகன் கோபாலகிருஷ்ணன் (31). காதல் திருமணம் செய்து கொண்ட இவரின் மனைவி ஐந்து மாத கா்ப்பமாக உள்ளாா். கோபாலகிருஷ்ணன் அருகேயுள்ள மேலதானியத்தில் உணவகம் நடத்தி வந்தாா்.

குடும்பப் பிரச்னை காரணமாக தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு இருந்து வந்ததாம். இந்நிலையில் திங்கள்கிழமை மாமியாா் வீட்டில் இருந்த கோபாலகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், கோபாலகிருஷ்ணன் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சம்பவம் குறித்து வளநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT