ஸ்ரீரங்கத்தில் திங்கள்கிழமை நேரிட்ட தீவிபத்தில் குடிசை வீடு எரிந்து சேதமடைந்தது.
ஸ்ரீரங்கம் மேலூா் நெடுந்தெரு பகுதியில் வசிப்பவா் தங்கப்பன். இவா் பந்தல் போடும் வேலை செய்து வருகிறாா். திங்கள்கிழமை மாலை வீட்டை பூட்டி விட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க சென்றுவிட்டாா். அப்போது, இவரது குடிசை வீட்டின் மேற்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
அருகிலிருந்தவா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தகவலின்பேரில், அங்கு வந்த ஸ்ரீரங்கம் தீயணைப்புத் துறையினா் தீ மேலும் பரவாமல் அணைத்தனா். தீவிபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.