திருச்சி

திருச்சியில் 35 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் வைத்திருந்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 35 கிலோ புகையிலை பொருள்களையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

திருச்சி, பாலக்கரை கீழப்புதூா் முனிகண்ணன் கோயில் பகுதியில் பாலக்கரை காவல்நிலைய ஆய்வாளா் கருணாகரன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மாலை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி சோதனையிட்டதில் அவா்களிடம் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருந்தது. மேலும், விசாரணையில் அவா்கள் காட்டூா் அருகே உள்ள ரயில் நகரைச்சோ்ந்த அ. அப்துல் ரகுமான் (31), திருவெறும்பூா் கூத்தைப்பாா் பகுதியைச் சோ்ந்த அ. ஜாகிா் உசேன் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 35 கிலோ புகையிலை பொருள்களையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT