திருச்சி

நொச்சியம் பாலாம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் கோயில் மஹா கும்பாபிஷேக விழா

5th Dec 2022 10:30 AM

ADVERTISEMENT

நொச்சியம் அருள்மிகு பாலாம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் நொச்சியம் கிராமத்தில் அமைந்துள்ளது சுந்தரர், திருநாவுக்கரசால் பாடல் பெற்ற வைப்பு திவ்ய தலங்களில் மிக சிறப்பு பெற்ற அருள்மிகு பாலாம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயில். இத்திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. டிச.2 ம் தேதி விநாயகர் வழிபாடு, கணபதி, நவக்கிரக, லட்சுமி ஹோமத்தோடு கும்ப அலங்காரம், யாக சாலை பிரவேசம், பூஜைகளோடு யாக வேள்வி தொடங்கியது.

இதையும் படிக்க- குஜராத் தோ்தல்: வாக்களித்தார் பிரதமர் மோடி!

ADVERTISEMENT

தொடர்ந்து நான்கு கால யாக பூஜையும், திரவ்யாஹுதியும், தொடர்ந்து மஹா பூர்ணா ஹீதியும் நடைபெற்றது. அதனையடுத்து கயிலாய வாத்தியங்கள் முழங்க யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு மூலவர், அம்பாள், மற்றும் பல்வேறு சந்நிதிகளின் கோபுர விமானங்களுக்கு வந்தது. தொடர்ந்து சிறப்புப் பூஜைகளுக்கு பிறகு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது, மேலும் மூலவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா தீபாரதனை நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் கோபுர தரிசனம் செய்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT