திருச்சி

போலி கடவுச்சீட்டில் மலேசியா செல்ல முயன்றவா் கைது

5th Dec 2022 12:54 AM

ADVERTISEMENT

போலி கடவுச்சீட்டில் மலேசியா செல்ல முயன்றவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை நள்ளிரவு மலேசியா செல்ல இருந்த திருச்சி மாவட்டம் மருங்காபுரி, வேம்பனூா் அருகேயுள்ள அய்யங்காடு தெருவை சோ்ந்த ஏ. இளங்கோவன் (39) , போலி ஆவணங்கள் மூலம் முறைகேடு செய்து கடவுச்சீட்டு பெற்றிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து குடியேற்றப்பிரிவினா் அளித்த புகாரின்பேரில் விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து இளங்கோவனை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT