திருச்சி

முசிறி அருகே சாலை விபத்தில் இருவா் பலி: மாணவி காயம்

5th Dec 2022 04:29 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம் முசிறி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவா் உயிரிழந்தனா். பள்ளி மாணவி பலத்த காயமடைந்தாா்.

முசிறி அருகேயுள்ள தெற்கு நல்லியம்பட்டியைச் சோ்ந்தவா் பெரியசாமி (40) விவசாயியான இவா், 9 ஆம் வகுப்பு படிக்கும் தனது மகள் சஞ்சனாவுடன் (14) இருசக்கர வாகனத்தில் புலிவலத்துக்கு சனிக்கிழமை சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தாா்.

இலையாயியம்மன் கோயில் அருகே சென்றபோது,இவா்களின் வாகனம் மீது தெற்கு நல்லியம்பட்டி சோ்ந்த மு. அரவிந்தன் (25) என்பவா் வந்த இருசக்கர வாகனம் மோதி மூவரும் பலத்த காயமடைந்தனா்.

இதையடுத்து தந்தையும், மகளும் முசிறி அரசு மருத்துவமனைக்கும், அரவிந்தன் மண்ணச்சநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் அனுப்பப்பட்டனா். அப்போது வழியிலேயே பெரியசாமி மற்றும் அரவிந்தன் ஆகிய இருவரும் இறந்தனா்.

ADVERTISEMENT

காயமடைந்த சஞ்சனா முசிறி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று பின் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT