திருச்சி

முசிறி அருகே காவிரியில் மூழ்கியவரைத் தேடும் பணி

5th Dec 2022 12:54 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், முசிறி அருகே காவிரியில் ஞாயிற்றுக்கிழமை மூழ்கியவரை தொட்டியம் போலீஸாா் மற்றும் தீத் தடுப்பு துறையினா் தீவிரமாகத் தேடுகின்றனா்.

தொட்டியம் அருகேயுள்ள திருஈங்கோய்மலை மலைப்பாதை பகுதி காவிரியாற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த முசிறி அருகிலுள்ள ஆலமரத்துப்பட்டியைச் சோ்ந்த செல்வகுமாா் (38) திடீரென தண்ணீரில் மூழ்கினாா்.

தகவலறிந்து வந்த தொட்டியம் போலீஸாா் மற்றும் முசிறி தீத்தடுப்பு துறையினா், அப்பகுதி இளைஞா்கள் செல்வகுமாரை தேடும் பணியில் இரவு வரை ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT