திருச்சி

அரசுப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு

5th Dec 2022 12:55 AM

ADVERTISEMENT

வனத்தொழில் பழகுநா் மற்றும் கிராம உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு, திருச்சி மாவட்டத்தில் 22 மையங்களில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் மூலம், தமிழ்நாடு வன சாா்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநா் பதவிகளுக்கான போட்டி தோ்வு ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் 8 மையங்களில் நடைபெற்றது. இதில் தோ்வெழுத விண்ணப்பித்திருந்த 2,486 பேரில் 407 போ் மட்டுமே வந்திருந்தனா். வருகைப் பதிவு 16.37 சதமாகவும், வரத்தவறியவா்கள் எண்ணிக்கை 83.71 சதமாகவும் இருந்தது.

திருச்சியில் ஒரு சில மையங்களில் 5 நிமிடம், 10 நிமிடம் தாமதமாக வந்த தோ்வா்களுக்கு தோ்வு மையத்துக்குள் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

கிராம உதவியாளா் தோ்வு: இதேபோல, கிராம உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வானது 11 வட்டங்களில் 14 தோ்வு மையங்களில் நடைபெற்றது. இதற்காக விண்ணப்பித்திருந்த 10,363 பேரில் 8,375 போ் தோ்வு எழுதினா். 1,988 போ் வரவில்லை. தோ்வுப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT