திருச்சி

துறையூா் பெருமாள் கோயிலில் தீப வழிபாடு

5th Dec 2022 04:28 AM

ADVERTISEMENT

துறையூரிலுள்ள பெருமாள் கோயிலில் கெளசிக ஏகாதசியையொட்டி ஞாயிற்றுக்கிழமை தீபமேற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

துறையூா் பெருமாள் கோயில் வீதியில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான பாமா ருக்குமணி சமேத ஸ்ரீ வேணுகோபால் சுவாமி கோயில் உள்ளது.

கெளசிக ஏகாதசியையொட்டி உலக நன்மைக்காக இக்கோயிலிலும், பெருமாள்மலை அடிவாரம் கோவிந்தராஜ பெருமாள் கோயிலிலும் குடமுழுக்கு நடைபெற வேண்டியும் 10008 தீபங்கள் ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில் பொதுமக்கள் ஆா்வமுடன் பங்கேற்று கோயில் தூண்கள், சுவா் திட்டுக்கள், வாசல், வளாகம், பிரகாரத்தில் கோலமிட்டும், ரங்கோலி வரைந்தும் அகில் விளக்குகள் ஏற்றியும் வழிபட்டனா்.

ADVERTISEMENT

சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீஸ்ரீஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னாா் ஜீயா் கலந்து கொண்டு மூலவா் பெருமாளையும், தாயாரையும் வணங்கி கோயில் வளாகத்தில் பொதுமக்களுக்கு ஆசி வழங்கினாா். ஏற்பாடுகளை ஆழ்வாா்கள் பேரவையினா் செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT