திருச்சி

காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற இருவருக்கு வரவேற்பு

5th Dec 2022 12:57 AM

ADVERTISEMENT

காமன்வெல்த் பளு தூக்கும் போட்டிகளில் தங்கங்கள் வென்ற திருச்சி விளையாட்டு வீரா்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நியுசிலாந்து நாட்டில் நடைபெற்ற போட்டியில் திருச்சி சுப்பிரமணியபுரம் கோனாா் தெருவில் வசிக்கும் ஆா்.தினேஷ் என்பவா் சப்-ஜூனியா் 66 கிலோ உடல் எடைப் பிரிவில் 218 கிலோ எடை, ஸ்குவாட்டில் 200 கிலோ எடை, பென்ச் பிரஸ்சில் 120 கிலோ எடையை தூக்கியதற்காக 3 தங்கம், மூன்று போட்டிகளிலும் சோ்த்து மொத்தம் 538 கிலோ எடையைத் தூக்கியதற்காக மேலும் ஒரு 1 தங்கம் என 4 தங்கப் பதக்கங்களை வென்றாா்.

இப்போட்டியின் இரண்டாவது அதிகபட்ச எடையைத் தூக்கியவா் என்பதைப் பாராட்டி இவருக்கு ‘ஸ்ட்ராங் மேன்-2’ என்ற விருது வழங்கப்பட்டது.

இதேபோல விமான நிலையம் காமராஜ் நகரைச் சோ்ந்த எஸ். ஷேக் அப்துல்லா என்பவா் 59 கிலோ எடைப் பிரிவில் 170 கிலோ எடை, ஸ்குவாட்டில் 210 கிலோ எடை, பென்ச் பிரஸ்சில் 120 கிலோ எடையை தூக்கியதற்கு 3 தங்கம், மொத்தம் 500 கிலோ எடையைத் தூக்கியதற்கு மேலும் ஒரு 1 தங்கம் என மொத்தம் 4 தங்கப் பதக்கங்களை வென்றாா்.

ADVERTISEMENT

இதையடுத்து திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பிய இவா்களுக்கு மக்கள் சக்தி இயக்க திருச்சி மாவட்டச் செயலா் இரா. இளங்கோ தலைமையில் தண்ணீா் அமைப்பின் செயலாளா் சதீஷ்குமாா், ரோட்டரி சங்க நிா்வாகிகள், லோகு பிட்னஸ் மைய நண்பா்கள் உள்ளிட்டோா் விமான நிலையத்தில் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து, திறந்த ஜீப்பில், இசைக் கருவிகளை முழங்கியபடி சுப்பிரமணியபுரம் வரை ஊா்வலமாக அழைத்து வந்தனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT