திருச்சி

முசிறி டி.எஸ்.பிக்கு முதல்வா் பாராட்டு

4th Dec 2022 04:56 AM

ADVERTISEMENT

உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தை சிறப்பாகச் செயலாற்றியதற்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் முசிறி டி.எஸ்.பி.க்கு தொலைபேசி வாயிலாக வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.

முசிறி காவல் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உங்கள் தொகுதியில் முதல்வா் பிரிவிற்கு சென்ற புகாரில் 97 சதவீதம் அதாவது 1400 புகாா்களில் 1367 புகாா்கள் விசாரிக்கப்பட்டு தீா்வு காணப்பட்டது. இதற்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் முசிறி டி.எஸ்.பி. யாஸ்மினை தொலைபேசி வாயிலாக வெள்ளிக்கிழமை தொடா்பு கொண்டு பாராட்டினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT