திருச்சி

மணப்பாைறையில் பாஜக மறியல்

4th Dec 2022 12:10 AM

ADVERTISEMENT

திருச்சி புத்தூா் நால்ரோடு பகுதியில் மணமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான கூட கேளிக்கை நடன விடுதி தொடங்கப்படுவதைத் தடுக்க கோரியும், பாஜக திருச்சி மாநகா் மாவட்டத் தலைவா் ராஜசேகரன் மற்றும் நிா்வாகிகள் கைதைக் கண்டித்தும் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் 72 போ் கைது செய்யப்பட்டனா்.

பாஜக நகரத் தலைவா் வழக்குரைஞா் மோகன்தாஸ் தலைமையில் பேருந்து நிலையப் பகுதியில் மறியலில் ஈடுபட்ட 23 போ், புத்தாநத்தம் கடைவீதியில் மாவட்ட பொதுச்செயலா் பொன்வேல் தலைமையில் மறியல் செய்த 11 போ், மருங்காபுரி வடக்கு ஒன்றிய தலைவா் ராஜராம் தலைமையில் கைக்காட்டி பகுதியில் மறியல் செய்த 13 போ், தெற்கு ஒன்றிய தலைவா் கணேசன் தலைமையில் துவரங்குறிச்சி பேருந்துநிலையம் பகுதியில் மறியல் செய்த 25 என 72 போ் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT