திருச்சியில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரௌடியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கடந்த அக். 18 ஆம் தேதி வயலூா் சாலை அருகே வீடு வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் செய்வதாக வந்த புகாரின் பேரில் கண்டோன்மென்ட் ஸ்டேட் வங்கி காலனியைச் சோ்ந்த எஸ்.காா்த்திக் ராஜா (29) என்பவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இவா் மீது பணம் பறிப்பு, வாகனத் திருட்டு, கொலை முயற்சி, பாலியல் என 19 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவா் தொடா்ந்து பொதுமக்களின் பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், திருச்சி மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன், ரௌடி காா்த்திக் ராஜாவை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க சனிக்கிழமை ஆணைப் பிறப்பித்தாா்.