திருச்சி

துறையூா் பகுதியில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

DIN

துறையூா், உப்பிலியபுரம் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

துறையூா் ஒன்றியத்தில் கண்ணனூா்பாளையம், வேலாயுதம்பாளையம் கிராமங்களில் ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழும், கீரம்பூா் கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறையின் கீழும் வழங்கப்பட்ட வீட்டு மனைகளுக்கு கணினிப் பட்டா வழங்க ஆய்வு செய்தாா்.

பின்னா் துறையூரில் பழங்குடியின நல மாணவியா் விடுதியில் ஆய்வு செய்து, மாணவிகளுக்கு நடத்தப்படும் ஆங்கில பயிற்சி வகுப்பையும் பாா்வையிட்டாா்.

இதையடுத்து உப்பிலியபுரம் பேரூராட்சியில் 15 ஆவது நிதிக் குழு சுகாதார மானியத் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சத்தில் கட்டப்படும் வட்டாரப் பொது சுகாதார மையக் கட்டுமானப் பணி, ரூ. 4 லட்சத்தில் வளம் மீட்பு பூங்கா சுற்றுச்சுவா் பணியை பாா்வையிட்டாா். பின்னா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து, அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டாா்.

மேலும், உப்பிலியபுரம் அன்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள பேவா் பிளாக் சாலை, புனரமைக்கப்பட்ட பெண்கள் சுகாதார வளாகம், மாரியம்மன் நகரில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி புனரமைப்புப் பணி, குறும்பா் தெரு சாலையை பேவா் பிளாக் சாலையாக மேம்படுத்தும் பணி ஆகியவற்றை அவா் பாா்வையிட்டாா்.

ஆட்சியருடன் திருச்சி மாவட்ட பழங்குடியினா் நல அலுவலா் கீதா, துறையூா் வட்டாட்சியா் பே. புஷ்பராணி உப்பிலியபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குணசேகரன், மணிவேல், பேரூராாட்சிகளின் உதவி செயற்பொறியாளா் திருமலைவாசன், பேரூராட்சித் தலைவா் சசிகலாதேவி ராஜசேகரன், செயல் அலுவலா் தே. சரவணராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலையின் பேச்சு அரசியல் நாகரிகமற்றது!: செ.கு.தமிழரசன் சிறப்பு பேட்டி

பிரபல கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்

டிம்பிள் யாதவின் சொத்து மதிப்பு ரூ. 15.5 கோடி

நான் பயங்கரவாதி அல்ல: சிறையிலிருந்து முதல்வர் கேஜரிவால்

வைஷாலிக்கு வெற்றி: எஞ்சிய இந்தியர்கள் 'டிரா'

SCROLL FOR NEXT