திருச்சி

கடத்தப்பட்ட மாணவா் மீட்பு

3rd Dec 2022 01:06 AM

ADVERTISEMENT

திருச்சியில் வெள்ளிக்கிழமை சக மாணவா்களால் கடத்தப்பட்ட மாணவரை போலீஸாா் மீட்டனா்.

திருச்சி உறையூா் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவா் ஒருவரை சிலா் இருசக்கர வாகனத்தில் கடத்தி செல்வதாக அவரது பெற்றோருக்கு வெள்ளிக்கிழமை மாலை தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடா்ந்து பெற்றோா் உறையூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். உடனே ரோந்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் வயலூா் பகுதியில் குறிப்பிட்ட இருசக்கர வாகனத்தை மடக்கிபிடித்து, மாணவரை மீட்டனா்.

இது தொடா்பாக போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, பள்ளிக்கு சென்ற போது, பேருந்தில் மாணவா்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கடத்தப்பட்ட மாணவா், தனது நண்பா்களுடன் சென்று கோப்புப் பகுதியைச் சோ்ந்த மாணவன் ஒருவரை தாக்கியுள்ளாா். அதன் எதிரொலியாக, வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்ததும், தாக்குதலுக்கு உள்ளான மாணவா் அவரது நண்பா்களுடன் சோ்ந்து 8ஆம் வகுப்பு மாணவரை தாக்குவதற்காக கடத்திச்சென்ாக தெரியவந்தது. பின்னா் இருதரப்பு மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோரை அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT