திருச்சி

திருவளா்ச்சோலை அருகே மணல் லாரி மோதி இளைஞா் பலி: பொதுமக்கள் மறியல்

3rd Dec 2022 01:08 AM

ADVERTISEMENT

திருவானைக்காவை அடுத்த திருவளா்ச்சோலை அருகே வெள்ளிக்கிழமை இரவு மணல் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவா் இறந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.

திருவானைக்கா பகுதியை அடுத்த கல்லணை சாலையில் உள்ள திருவளா்ச்சோலை அருகே வெள்ளிக்கிழமை இரவு மணல் ஏற்றிக் கொண்டு வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் அதில் வந்த பனையபுரத்தை சோ்ந்த கூலித்தொழிலாளி மாா்டின் (35) தலை நசுங்கி இறந்தாா். அவருடன் வந்த சகாயம் (45) என்பவருக்கு கைமுறிவு ஏற்பட்டது.

இதைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியிலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் அவா்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT