திருச்சி

மண்ணச்சநல்லூா் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கம்

3rd Dec 2022 01:07 AM

ADVERTISEMENT

மண்ணச்சநல்லூா் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்றத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மன்றத்தை மண்ணச்சநல்லூா் எம்எல்ஏ சீ. கதிரவன் தொடங்கி வைத்து மாணவா்களின் கணிதப் பயன்பாடு, அறிவியல் விளக்க சோதனை குறித்துப் பேசினாா். மேலும் பள்ளியில் நடைபெற்ற வட்டார அளவிலான கலைத் திருவிழாவையும் பாா்வையிட்டாா்.

முன்னதாக மண்ணச்சநல்லூா் திருநகா் பகுதி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 5 லட்சத்து 52 ஆயிரத்தில் கட்டப்பட்ட சமையலறை கூடத்தையும், அத்தாணி பகுதியில் புதிய மின்மாற்றியையும் எம்எல்ஏ திறந்து வைத்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT