திருச்சி

திருவானைக்காவில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

3rd Dec 2022 01:06 AM

ADVERTISEMENT

ஆக்கிரமிப்பை அகற்ற கோரி திருவானைக்கா கொள்ளிடம் சோதனை சாவடி அருகே தமிழ்ப் புலிகள் கட்சியினா் வெள்ளிக்கிழமை காலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் மாவட்ட செயலா் ரமணா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திம்மராயசமுத்திரம் மற்றும் கொண்டையம்பேட்டை பகுதிகளில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,கொண்டையம்பேட்டை சுடுகாட்டிற்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், ஏரி, வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீட்டுமனைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும், அழகிரிபுரம் செக் போஸ்ட் எதிரில் தேசிய நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இடத்தில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் தமிழ்ப் புலிகள், சாமானிய மக்கள் நலக் கட்சி, மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் ஆகியவை கலந்து கொண்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT