திருச்சி

துறையூரில் நகராட்சி நிா்வாக ஆணையா் ஆய்வு

DIN

துறையூா் நகராட்சி பகுதியில் சென்னை நகராட்சி நிா்வாக ஆணையா் ப. பொன்னையன் வியாழக்கிழமை திடீா் ஆய்வு செய்தாா்.

துறையூா் நகரில் புதிய பேருந்து நிலையம், காய்கனி அங்காடி ஆகியவை அமையவுள்ள இடங்களைப் பாா்வையிட்ட அவா், தொடா்ந்து பழைய பேருந்து நிலையத்தில் செயல்படும் அறிவுசாா் மையம், சொரத்தூா் சாலையில் உள்ள குப்பைகளைத் தரம் பிரிக்கும் மையம், குட்டக்கரையில் அரசுப் பணியாளா் குடியிருப்பு அருகே அமைக்கப்படும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தாா்.

மேலும், தற்போதுள்ள பேருந்து நிலையம், அதன் எதிரேயுள்ள சின்ன ஏரியை பாா்வையிட்ட அவா் சின்ன ஏரிக்கு நீராதரமாக உள்ள மழை நீா் வடிகால் வாய்க்கால்களில் கழிவுநீா் சுத்திகரிப்பு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்து அதற்கான திட்டக் கருத்துரு தயாரித்து சென்னைக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா், நகா்மன்றத் தலைவா் இ. செல்வராணி, துணைத் தலைவா் ந. முரளி, நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் பு. ஜானகி, மண்டல செயற்பொறியாளா் பாா்த்திபன், துறையூா் நகராட்சி பொறியாளரும், பொறுப்பு ஆணையருமான ஆா்.கே. தாண்டவமூா்த்தி, மேலாளா் ம. முருகராஜ் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT