திருச்சி

லால்குடியில் வட்டார அளவிலான கலைத் திருவிழா

2nd Dec 2022 03:47 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், லால்குடி எல்.என்.பி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 29 ஆம் தேதி தொடங்கிய லால்குடி வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் டிச. 3 வரை நடைபெறுகின்றன.

போட்டிகளில் லால்குடி வட்டார அளவில் உள்ள 25-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 6,7,8 ஆகிய வகுப்பு மாணவ மாணவிகள் பங்கேற்றனா். போட்டிகளை லால்குடி வட்டாரக் கல்வி அலுவலா் பிரபு தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். 36 வகையான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் மாவட்ட போட்டிக்கு தோ்வு செய்யப் படுகின்றனா்.

போட்டியை லால்குடி வட்டார வளமைய மேற்பாா்வையாளா் குமாா், ஆசிரியப் பயிற்றுநா்கள், தலைமையாசிரியா்கள், உதவி தலைமையாசிரியா்கள் நடத்துகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT