திருச்சி

மண்ணச்சநல்லூரில் வட்டாரஅளவிலான கலைத் திருவிழா

2nd Dec 2022 03:47 AM

ADVERTISEMENT

மண்ணச்சநல்லூா் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான கலைத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில் இசைக்கருவிகள் சாா்ந்த வில்லிசை, மற்றும் பறையிசை குழுப் போட்டிகள்,நாடகப் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் 11 மேல்நிலைப் பள்ளிகள், 5 உயா்நிலை பள்ளிகளில் பயிலும் 9 .10 ஆம் வகுப்பு மாணவ - மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.

மண்ணச்சநல்லூா் வருவாய் வட்டாட்சியா் சக்திவேல்முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா். தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் ஒருங்கிணைந்து போட்டிகளை நடத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT