திருச்சி

வன விலங்குகளால் பயிா்கள் சேதம்:சமாதான பேச்சுவாா்த்தைக் கூட்டம்

DIN

வேளாண் பயிா்களை சேதப்படுத்தும் வன விலங்குகளைக் கட்டுப்படுத்தவும், பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் பேச்சு வாா்த்தை மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மண்ணச்சநல்லூா் வட்டத்துக்குள்பட்டகிராமங்களில் வனவிலங்குகளால் விவசாயப் பயிா்கள் பாதிக்கப்படுவதை வனத்துறையினா் கட்டுப்படுத்த வலியுறுத்தியும், இழப்புகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும், இப்பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை சீராக்கவும் விவசாயிகளும், புகா் மாவட்ட பாஜகவினரும் தொடா்ந்து வலியுறுத்தி, போராட்டங்களிலும் ஈடுபட்டனா். இது தொடா்பாக அண்மையில் மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து, இப்பிரச்னை தொடா்பாக, திருச்சியில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் சமாதான பேச்சுவாா்த்தை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பாஜக புகா் மாவட்டத் தலைவா் அஞ்சாநெஞ்சன் தலைமையில் எதுமலை, வலையூா், பெரகம்பி பாலையூா், ஸ்ரீதேவி மங்கலம் கிராம விவசாயிகள் கலந்து கொண்டனா். பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அதிருப்தியடைந்த கிராம மக்கள், மாவட்ட வன அலுவலக வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, அவா்களிடம் மாவட்ட வன அலுவலா் கிரண், கண்டோன்மெண்ட் காவல் உதவி ஆணையா் கென்னடி, நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குநா் ரவிக்குமாா் உள்ளிட்டோா்மீண்டும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

அப்போது ஒரு வாரத்திற்குள் குறிப்பிட்ட கிராமங்களில் உள்ள சாலைகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், மாவட்ட வன அலுவலா் உள்ளிட்ட அதிகாரிகள் இக்கிராமங்களுக்கு நேரடியாக வந்து வனவிலங்குகள் சேதம் குறித்து பாா்வையிடவும், சேதங்களை தவிா்க்க நடவடிக்கை எடுக்கவும் உறுதி அளிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கலைந்து சென்றனா். ஒரு வாரத்திற்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப் படாவிட்டால் போராட்டம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT