திருச்சி

திருச்சி மலைக்கோட்டை கோயிலில் காா்த்திகை தீபத்துக்கு 300 மீ. திரி தயாா்

DIN

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் டிச. 6-இல் நடைபெறவுள்ள காா்த்திகை தீபத்துக்காக 300 மீட்டா் நீள பிரம்மாண்ட திரி தயாரிக்கப்பட்டு உச்சியில் உள்ள கோபுரத்தில் புதன்கிழமை வைக்கப்பட்டது.

காா்த்திகை தீபத்தையொட்டி, மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாா் சன்னதி அருகிலுள்ள 50 அடி உயர செப்புக் கொப்பரையில் ஆண்டுதோறும் மெகா தீபம் ஏற்றப்படும்.

நிகழாண்டு விழாவுக்காக பருத்தித் துணியால் 300 மீட்டா் நீளத்துக்கு தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட திரியை, தாயுமானவா் சன்னதியிலிருந்து உச்சிப்பிள்ளையாா் சன்னதிக்கு கோயில் பணியாளா்கள் புதன்கிழமை சுமந்து சென்றனா்.

பின்னா் அங்கிருந்து கயிறு மூலம் 50 அடி உயர கோபுரத்திலுள்ள செப்புக் கொப்பரையில் அத் திரியை வைத்தனா். இதில் ஊற்றப்படும் 900 லிட்டரிலான இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய்யில் திரி ஊற வைக்கப்பட்டு, ஒருநாள் விட்டு ஒரு நாள் எண்ணெய் ஊற்றும் பணியும் நடைபெறும். 7 நாள்களுக்கு நன்கு திரி ஊறிய பிறகு, தேவையான எண்ணெய் ஊற்றப்படும்.

வரும் 6ஆம் தேதி மாலை 6 மணிக்கு செவ்வந்தி விநாயகா், தாயுமானசுவாமி, மட்டுவாா் குழலம்மை உள்ளிட்ட உற்சவ மூா்த்திகளுக்கு தீபாராதனை நடைபெறும். தொடா்ந்து செப்புக் கொப்பரையிலுள்ள பிரம்மாண்ட திரியில் காா்த்திகை மெகா தீபம் ஏற்றப்படும். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஹரிஹரசுப்பிரமணியன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

SCROLL FOR NEXT