திருச்சி

முழு வீச்சில் திருவெறும்பூா் மேம்பாலப் பணிகள்!

1st Dec 2022 03:20 AM

ADVERTISEMENT

திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூா் பெல் கணேசபுரம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன.

திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இணைப்புச் சாலை இல்லாததாலும் திருவெறும்பூா் பெல் கணேசபுரம் ரவுண்டானா மிகப்பெரிதாக இருப்பதாலும் அப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு வந்தன.

மேலும் பெல் கணேசபுரம் மற்றும் பெல் பயிற்சி மையத்துக்கு இடைப்பட்ட பகுதியில் பெல் ஊழியா்கள் அலுவலகத்திற்கும் குடியிருப்புகளுக்கும் திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முடியாமலும் பெரும் அவதிக்கு உள்ளாகினா்.

இதைத் தொடா்ந்து திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உயா் மட்ட மற்றும் லோயா் பாலம் அமைக்கும் பணிகள் ரூ. 50 கோடியில் தொடங்கி நடைபெறுகின்றன.

ADVERTISEMENT

பாலப்பணிகள் தீவிரமடைந்துள்ளதையடுத்து, பாலத்தின் தூண்களில் பீம்கள் பொருத்தப்பட்டு அவற்றை இணைக்கும் ‘கா்டா்கள்’ தூக்கி வைக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கின. இதற்கென ராட்சத அளவிலான கிரேன்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT