திருச்சி

மகளிா், குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

1st Dec 2022 03:22 AM

ADVERTISEMENT

சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம் தலைமை வகித்து, கூட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.

மாவட்ட சமூக நல அலுவலா் நித்யா, சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிா்ப்பு தினம் குறித்து நோக்க உரையாற்றினாா். மாவட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பிரபு, மாவட்ட வரதட்சிணை தடுப்புக் குழு உறுப்பினரும் வழக்குரைஞருமான விஜயபாபு, மாவட்ட சுற்றுலா அலுவலா் ஜெகதீஸ்வரி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு பேசினா்.

மாநகர, மாவட்ட காவல் துறை குழந்தைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளா்கள் அஜிம்,சிவராஜ் ஆகியோரும் பேசினா். கூட்டத்தில், அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், குழந்தை நல காவல் அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT