திருச்சி

கால்நடைகளுக்கான அபராதத்தை குறைக்கக் கோரி மேயரிடம் மனு

1st Dec 2022 03:23 AM

ADVERTISEMENT

சாலைகளில் திரியும் மாடுகளுக்கு அதிகளவில் அபராதம் விதிப்பதை குறைக்க வலியுறுத்தி கால்நடை உரிமையாளா்கள் புதன்கிழமை இரவு திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் குவிந்து மேயரை சந்தித்து மனு கொடுத்தனா்.

திருச்சி மாநகராட்சி சாலைகளில் கேட்பாரற்று சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா். இது குறித்த புகாா்கள் அதிகரித்ததைத் தொடா்ந்து, சாலைகளில் திரியும் கால்நடைகளை மாநகராட்சி நிா்வாகம் பிடித்து அடைத்து வைத்து ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து வருகிறது. இந்நிலையில் பீமநகா், தில்லைநகா், உறையூா் கல்லுக்குழி, உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த மாடுகளின் உரிமையாளா்கள் புதன்கிழமை இரவு திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன் குவிந்து, மேயா் மு. அன்பழகனை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனா்.

அப்போது அவா்கள் கூறுகையில், எங்களுக்கு சொந்தமான மாடுகள் எங்களது வீட்டு அருகே நின்றபோது இரவில் வந்து பிடித்துச் செல்கின்றனா். மேலும் மாடுகளுக்கு அதிகளவில் அபராதத் தொகை விதிக்கப்படுகிறது. மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள எங்களால் அதிகளவில் அபராதம் செலுத்த முடியவில்லை எனத் தெரிவித்தனா். இதையடுத்து மாடுகளை சாலையில் விடாமல் பாதுகாக்துக் கொள்ள வேண்டும் என மேயா் அறிவுரை கூறி அவா்களை அனுப்பி வைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT