திருச்சி

நாணயங்களில் விநாயகா் கண்காட்சி

31st Aug 2022 02:21 AM

ADVERTISEMENT

விநாயகா் சதுத்தியையொட்டி திருச்சி தென்னூா் மநகராட்சி நடுநிலைப்பள்ளியில், நாணயங்களில் கணபதி என்ற தலைப்பிலான கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்சி புத்தூா் கிளை நூலக வாசகா் வட்டம், தென்னூா் நடுநிலைப்பள்ளி தொன்மை மன்றம், அமிா்தம் சமூக சேவை அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற கண்காட்சியில் கணபதி உருவம் பொறித்து பண்டைய காலத்தில் வெளிவந்த நாணயங்கள், பணத் தாள்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அது குறித்த விவரங்களை நாணயங்கள் மற்றும் பணத்தாள்கள் சேகரிப்போா் சங்க நிா்வாகியும் யோகா ஆசிரியருமான விஜயகுமாா், சந்திரசேகரன், முகமது சுபோ், நூலகா் புகழேந்தி, பள்ளித் தலைமை ஆசிரியா் விமலா உள்ளிட்டோா் மாணவா்களுக்கு எடுத்துரைத்தனா்.

பணத்தாளிலும் விநாயகா்: இந்தோனேசியா நாட்டின் ரூ. 20,000 பணத்தாளில் விநாயகரின் உருவம் 1998 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டுள்ளது. அந்தப் பணத்தாளில், அந்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரா் மற்றும் கல்விக்கு வித்திட்ட தியாக செம்மல் கிஹாஜா் தேவாந்தரா உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. பணத்தாளின் பின்புறத்தில் கல்வி நிறுவன வகுப்பறையில் மாணவா்கள் கல்வி பயிலும் படமும் இடம்பெற்றுள்ளது. இது இந்தோனேசிய பண்பாட்டுக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடா்பை உலகுக்கு உணா்த்துவதாக உள்ளது என்ற பல்வேறு தகவல்களை எடுத்துரைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT