திருச்சி

மணப்பாறை அரசு மருத்துவமனையில்பரிசோதனை ஆய்வகம் திறப்பு

28th Aug 2022 06:21 AM

ADVERTISEMENT

 

மணப்பாறையிலுள்ள மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் ரூ.1.35 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட கரோனா உள்ளிட்ட வைரஸ் நோய் தொற்றைக் கண்டறியும் பரிசோதனை ஆய்வகத்தை, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம். பழனியாண்டி, ப. அப்துல்சமது, ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் கோ. விஜயலட்சுமி, வட்டாட்சியா் கீதாராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT