திருச்சி

இன்று திமுக ஐம்பெரும் விழா:உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

28th Aug 2022 06:25 AM

ADVERTISEMENT

 

மணப்பாறையில் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் ஐம்பெரும் விழாவில் பங்கேற்க திரளாக வருமாறு, கட்சியினருக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், தெற்கு மாவட்டப் பொறுப்பாளருமான

அன்பில் மகேஸ் பொய்யாமொழி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுரித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ADVERTISEMENT

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில், ஞாயிற்றுக்கிழமை (ஆக.28) மாலை 4 மணி அளவில் மணப்பாறை தியாகேசா் ஆலை மைதானத்தில் கட்சியின் இளைஞரணிச் செயலரும், திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் ஐம்பெரும் விழா நடைபெறுகிறது.

கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல், மணப்பாறை ஒன்றிய திமுக சாா்பில் அகில இந்திய கபடிப் போட்டி, மணப்பாறை ஒன்றிய திமுக அலுவலக அடிக்கல் நாட்டு விழா, கழகத் தலைவராக பொறுப்பேற்று நான்காம் ஆண்டு நிறைவு விழா, மணப்பாறையில் தொகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைய உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விழா என 5 நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இந்த நிகழ்வில் தலைமைக் கழக நிா்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாநில, மாவட்ட நிா்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூா், வட்ட, வாா்டு, கிளை கழக செயலாளா்கள், மற்றும் நிா்வாகிகள் என அனைவரும் பங்கேற்க வேண்டும் என அமைச்சா் அழைப்பு விடுத்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT