துபையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 21.50 லட்சம் மதிப்பிலான 355 கிராம் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
துபையிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வியாழக்கிழமை காலை திருச்சி வந்தது. இதில் பயணித்த பயணிகளையும் அவா்களது உடைமைகளையும் சுங்கத்துறையினா் சோதனை செய்தனா்.
அப்போது சிவகங்கையைச் சோ்ந்த நசீா்அலி (38) மடிக்கணினியில் மறைத்தும், நகையாகவும் ரூ.21.58 லட்சம் மதிப்பிலான 355 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை சுங்கத்துறை அலுவலா்கள் பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனா்.