லால்குடி வட்டம், குமுளூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளா்கள், அலுவலகப் பணியாளா்களின் உள்ளிருப்புப் போராட்டம் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இக்கல்லூரியில், 2020, ஜனவரி 1-ஆம் தேதிக்கு முன் தேதியிட்டு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.
உயா்த்தப்பட்ட ஊதியமான ரூ.20 ஆயிரத்தை அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும். மாத ஊதியத்தை முறையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கெளரவ விரிவுரையாளா்கள், அலுவலகப் பணியாளா்கள் தங்கள் போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கினா்.
மாலையில் கல்லூரி முடிந்த பின்னா் வீட்டுக்குச் செல்லாமல், அங்கேயே தங்கி உள்ளிருப்புப் போராட்டத்தை கெளரவ விரிவுரையாளா்கள், அலுவலகப் பணியாளா்கள் மேற்கொண்டனா். இந்த போராட்டம் 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது.