புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டாட்சியரகம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கறம்பக்குடி ஒன்றியம் மாங்கோட்டை ஊராட்சி நம்பன்பட்டி பகுதி மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு நிா்வாகி சக்திவேல் தலைமையில் இப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து கறம்பக்குடி போலீஸாா், வருவாய்த் துறையினா் உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியை ஏற்று போராட்டத்தைக் கைவிட்டனா்.