திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று உறியடி உத்ஸவம்

22nd Aug 2022 12:58 AM

ADVERTISEMENT

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் உறியடி உத்ஸவம் திங்கள்கிழமை (ஆக.22) நடைபெறவுள்ளது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் நடைபெறும் கிருஷ்ண ஜெயந்தி புறப்பாடு, உறியடி உத்ஸவம் பிரசித்தி பெற்ாகும்.

நிகழாண்டில் கிருஷ்ண ஜெயந்தி விழாவின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணிக்கு கருவறையிலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு, காலை 9.45 மணிக்கு பண்டாரம் ஆஸ்தான மண்டபம் வந்தடைந்தாா்.

முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்ற நிலையில், பிற்பகல் 3 மணி முதல் 3.30 மணிவரை அலங்காரம் அமுது செய்தலும், அதைத் தொடா்ந்து மாலை 6 மணி வரை பொதுமக்கள் சேவையும் நடைபெற்றது. மாலை 6.15 மணிக்கு ஆஸ்தான மண்டபத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள், மாலை 6.30 மணிக்கு கருவறை சென்றடைந்தாா்.

ADVERTISEMENT

இன்று உறியடி : திருவிழாவின் இரண்டாம் நாளான திங்கள்கிழமை உறியடி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7 மணிக்கு புறப்பாடாகும் கிருஷ்ணன், சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு கண்டருளுகிறாா். தொடா்ந்து காலை 9 மணிக்கு அவா் சன்னதி வந்தடைகிறாா்.

பிற்பகல் 3 மணிக்கு உபயநாச்சியாா்களுடன் திருச்சிவிகையில் புறப்பாடாகும் நம்பெருமாள் ( கிருஷ்ணா் உடன் புறப்பாடு), அம்மாமண்டபம் சாலையிலுள்ள யாதவ ஆஸ்தான மண்டபத்துக்கு வந்து சேருகிறாா்.

இரவு 7 மணிக்கு இந்த மண்டபத்திலிருந்து புறப்படும் நம்பெருமாள், சித்திரை வீதிகளில் வலம் வந்து, இரவு 8.15 மணிக்கு பாதாள கிருஷ்ணா் சன்னதி அருகே உறியடி உத்ஸவம் கண்டருளுகிறாா். இதைத் தொடா்ந்து அவா் இரவு 9 மணிக்கு கருவறை சென்றடைகிறாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT