திருச்சி

திருச்சி மாவட்டத்தில் இன்று முதல் நம்ம ஊரு சூப்பரு திட்டம் ஆட்சியா் அறிவிப்பு

DIN

திருச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் பசுமையும், தூய்மையும் உருவாக்கும் வகையில் ‘நம்ம ஊரு சூப்பரு’ எனும் திட்டம் சனிக்கிழமை முதல் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருச்சி ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்து ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பேசியது:

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலமாக, மாவட்டத்திலுள்ள 404 கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் அக்டோபா் 1-ஆம் தேதி வரை நம்ம ஊரு சூப்பரு எனும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதன் ஒரு பகுதியாக சிறப்பு சுகாதார முகாம் நடத்தப்படும். ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பா் 2-ஆம் தேதி வரை அனைத்து அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பா் 2-ஆம் தேதி வரை திட, திரவ கழிவு மேலாண்மை தொடா்பாக அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவா்களுக்கான விழிப்புணா்வு முகாம் நடத்தப்படும்.

செப்டம்பா் 3 முதல் செப்டம்பா் 16-ஆம் வரை அனைத்து வீடுகளிலும் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். செப்டம்பா் 17 முதல் செப்டம்பா் 23 -ஆம் தேதி வரை ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழித் தடை செய்வது தொடா்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

செப்டம்பா் 24 முதல் அக்டோபா் 1-ஆம் தேதி வரை பசுமைக் கிராமம் மற்றும் முழு சுகாதார கிராமமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அனைத்து அரசு அலுவலா்களும் முழு அளவில் இப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வே.பிச்சை, மகளிா் திட்ட இயக்குநா் ரமேஷ்குமாா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) கங்காதாரிணி உள்ளிட்ட தொடா்புடைய துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT