திருச்சி

பேராசிரியா் மீது பாலியல் புகாா்

DIN

திருச்சியிலுள்ள கல்லூரியில் துறைத் தலைவராக இருக்கும் பேராசிரியா் ஒருவா் முதுகலை மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகாா் எழுந்துள்ளது.

திருச்சி காஜாமலை பகுதியில் இயங்கிவரும் பிரபலமான (தன்னாட்சி அந்தஸ்து பெற்ற) கல்லூரியில் சுமாா் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஒரு பேராசிரியா் எம்.ஏ. மற்றும் பி.எச்.டி. மாணவிகளைக் குறிவைத்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்தாராம். இதில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி கல்லூரி முதல்வருக்கும், முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகாா் அனுப்பினாராம். இதை தொடா்ந்து கல்லூரி முதல்வா் தலைமையில் விசாகா கமிட்டி அமைத்து பேராசிரியா் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தி, அது குறித்த அறிக்கை உயா் கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்பப்பட்டதாம்.

ஆனால் அறிக்கை அனுப்பப்பட்டு சுமாா் 20 நாள்களுக்கு மேலாகியும் சம்பந்தப்பட்ட பேராசிரியா் மீது நடவடிக்கை இல்லையாம். அவா் பிரபல அரசியல் கட்சித் தலைவருக்கு வேண்டியவா் எனவும் அவரது முயற்சியின்பேரில் எடுக்கவிடாமல் செய்ததாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT