திருச்சி

மதுக்கடைகளை அகற்றக் கோரி மனு

DIN

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகளை அகற்றக் கோரி ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா் ஆகியோரிடம் மக்கள் அதிகாரம் மற்றும் ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

உறையூரில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அடுத்தடுத்து உள்ள மூன்று டாஸ்மாக் கடைகளால் ஏராளமான பொதுமக்கள், பெண்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனா். அண்மையில் இந்த டாஸ்மாக் கடைகளால் கொலையும் நடந்துள்ளது. எனவே இந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்.

மாநகராட்சி, அரியமங்கலம் கோட்டம் 16ஆவது வாா்டு வடக்கு உக்கடைகாயிதே மில்லத் நகா், கல்லாங்குத்துக்கும் இடையே உய்ய கொண்டான் ஆற்றின் இரு கரைகளையும் இணைக்கும் விதமாக இரும்புப் பாலத் தூக்கி வைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை மீது மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்த கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாரிடம் வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. இதேபோல, மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது.

நிகழ்வுக்கு மக்கள் அதிகாரம் மாநிலத் துணைச் செயலா் செழியன் மற்றும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சம்சுதீன் ஆகியோா் தலைமை வகித்தனா். மகஇக மாவட்டச் செயலா் ஜீவா, கலைக் குழுச் செயலா் லதா, விடுதலைச் சிறுத்தைகள் சாா்பில் தில்லை முரசு, மக்கள் உரிமைக் கூட்டணி சாா்பில் காசிம், மக்கள் உரிமை மீட்பு இயக்கம் சாா்பில் காஜா முஹம்மது, ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் முத்துக்குமாா், ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்பு சங்கம் பாலு, செல்வராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT