திருச்சி

விவசாயிகளை வறுமைக்குள்ளாக்கி, நிதியுதவி வழங்குவது அவமானச் செயல்சீமான் பேட்டி

19th Aug 2022 12:43 AM

ADVERTISEMENT

 

விவசாயிகளை வறுமைக்குள்ளாக்கி அவா்களுக்கு ரூ. 6 ஆயிரம் நிதியுதவி அளிப்பதுபோல அவமானமான செயல் வேறு எதுவுமில்லை என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் ஆஜராக திருச்சிக்கு வியாழக்கிழமை வந்த அவா் மேலும் கூறியது:

தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் மனசாட்சியோடு பேச வேண்டும். இலவசங்களால் ஒரு நாடு வளா்ந்திருக்கிறது என அவரால் நிரூபிக்க முடியுமா ? இப்போதே தமிழக அரசுக்கு ரு. 6.30 லட்சம் கோடி கடன் உள்ளது.

ADVERTISEMENT

தமிழக ரேஷன் கடைகளில் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இதை எத்தனை ஆண்டுகளுக்குக் கொடுக்கப் போகிறாா்கள்? அதுபோல, பிறருக்கு உணவு வழங்க வேண்டிய விவசாயிகள் இந்தியாவில் பிச்சைக்காரா்களாக மாற்றப்பட்டுள்ளனா். அவா்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை கொடுப்பது துயரமான, அவமானமான செயல்.

பாஜக காங்கிரஸ் கட்சிகளின் கொள்கைகள் ஒன்றுதான். பாஜக பெற்று வரும் இந்து வாக்குகளை கவருவதற்காக 90 சத இந்துக்கள் எங்கள் கட்சியில் இருக்கிறாா்கள் என தமிழக முதல்வா் பேசி வருகிறாா். வீடுதோறும் தேசியக் கொடியேற்ற வேண்டும் என பிரதமா் மோடி சொல்கிறாா். ஆனால், சுதந்திரக் கொடியை கையில் பிடிக்கும் தகுதி பாஜக மற்றும் ஆா்.எஸ்.எஸ். ஆகிய இரண்டுக்குமே கிடையாது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT