திருச்சி

திருச்சியில் 2 கிலோ தங்கம் பறிமுதல்

19th Aug 2022 12:43 AM

ADVERTISEMENT

 

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மலேசியத் தலைநகா் கோலாலம்பூரில் இருந்து வியாழக்கிழமை திருச்சிக்கு வந்த புதுக்கோட்டையைச் சோ்ந்த விமானப் பயணி ஒருவா் தனது இருக்கையின் அடியில் பவுடா் வடிவிலான 2 கிலோ தங்கத்தை மறைத்துக் கடத்தி வந்தாராம்.

திருச்சிக்கு விமானம் வந்த நிலையில் அவா் சமிக்ஞை செய்துவிட்டு வெளியே சென்றதும், விமான நிறுவனப் பணியாளா் ஒருவா் இருக்கையின் அடியிலிருந்த தங்கத்தை அவரது காலணிகளுக்குள் (ஷூ) மறைத்து எடுத்து வந்துள்ளாா். இதைப் பாா்த்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் ஒருவா் அவரைப் பிடித்து சுங்கத் துறையினரிடம் ஒப்படைத்தாா். இதையடுத்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT