திருச்சி

அரியாற்றுக் கரையில் உடைப்பை சரிசெய்யும் பணி தீவிரம்

DIN

திருச்சி அருகே அரியாற்றின் கரையில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும் பணியில் அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா்.

கா்நாடக மாநில நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக அந்த மாநில அணைகள் நிரம்பின. இதைத் தொடா்ந்து அணைகளிலிலிருந்து உபரி நீா் வெளியேற்றப்பட்டு, தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டது. இதனால் மேட்டூா் அணைக்கு வரும் நீா்வரத்து அதிகரிப்பால், காவிரிக் கரையோரப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதுபோல, திருச்சி புகா் பகுதிகளில் பெய்த மழையால் ஆங்காங்கே உள்ள காட்டாறுகள் மற்றும் நீா்நிலைகள் வழியாக அரியாறு, கோரையாறுகள் வழியாக தண்ணீா் வந்து, திருச்சி புத்துாா் ஆறுகண்ணை கடந்து குடமுருட்டி ஆறு வழியாக காவிரியில் கலந்து வருகிறது.

இந்த நிலையில், திருச்சி நாச்சிக்குறிச்சி ஊராட்சி, இனியானூா் பகுதியிலுள்ள அரியாற்றின் கரை உடைந்து தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் அருகிலுள்ள வா்மா நகா் பகுதி மற்றும் அரியாறு கரையை ஒட்டியுள்ள பகுதிகளிலுள்ள 25-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீா் சூழ்ந்து குளம் போல் காட்சி அளிக்கிறது.

தற்போது உடைப்பு ஏற்பட்டுள்ள அரியாறு கரையை சரி செய்வதற்காக பொதுப்பணித்துறை அலுவலா்கள் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT