திருச்சி

வெடிபொருள் கண்டறியும் உபகரணங்கள்: ஐஜி ஆய்வு

18th Aug 2022 12:24 AM

ADVERTISEMENT

வெடிபொருள்கள் கண்டறியும் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள், அதன் பராமரிப்புகளை மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவா் சந்தோஷ்குமாா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மத்திய மண்டலத்துக்குள்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா், கரூா் மாவட்டங்களில் செயல்படும் வெடிபொருள் கண்டுபிடிப்பு மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவு (பி.டி.டி.எஸ்) காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள தளவாடப் பொருட்கள், உபகரணங்கள் மீதான ஆய்வு புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சி சுப்பிரமணியபுரத்திலுள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற ஆய்வின் போது, தளவாடப் பொருள்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப உபகரணங்கள் மாவட்டம் வாரியாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இதை மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவா் சந்தோஷ்குமாா் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். பின்னா், களத்தில் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் பணிகளைத் துரிதமாகவும், பாதுகாப்புடனும் மேற்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கமளித்தாா்.

ADVERTISEMENT

ஆய்வின் போது திருச்சி சரகக் காவல்துறைத் துணைத் தலைவா் சரவணசுந்தா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT