திருச்சி

வையம்பட்டி ஒன்றியத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு

DIN

மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ரூ. 78.34 லட்சத்திலான கட்டடங்களை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்

வையம்பட்டி ஒன்றியம் சடையம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ரூ. 49.54 லட்சத்தில் கட்டப்பட்ட கலை மற்றும் கைத்தொழில் அறை, கணினி அறை மற்றும் ஒரு கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை அமைச்சா் திறந்து வைத்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கிப் பேசினாா்.

தொடா்ந்து வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தொப்பநாயக்கன்பட்டியில் ரூ.19.72 லட்சத்தில் கட்டப்பட்ட குமாரவாடி ஊராட்சி அலுவலகக் கட்டடத்தையும், எலமணம் ஊராட்சியில் ரூ. 9.08 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடியையும் அமைச்சா் திறந்து வைத்தாா்.

நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ரங்கநாதன், மாவட்டக் கல்வி அலுவலா் செல்வி, ஒன்றியக் குழுத் தலைவா் ந. குணசீலன், துணைத் தலைவா் ஸ்ரீவித்யா ரமேஷ்குமாா், ஊராட்சித் தலைவா் கீதாமணி மற்றும் பொதுப்பணி, பள்ளிக் கல்வி, ஊரக வளா்ச்சி த்துறை அலுவலா்கள், திமுக மாவட்ட பொருளாளா் என். கோவிந்தராஜன், ஒன்றியச் செயலா்கள் வி.ஏ. ராஜேந்திரன், ஆா். சீரங்கன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT