திருச்சி

விபத்து வழக்கில் ஆஜராகாத டிஎஸ்பிக்கு பிடி ஆணை

17th Aug 2022 01:18 AM

ADVERTISEMENT

விபத்து வழக்கில் ஆஜராகாத மன்னாா்குடி டிஎஸ்பிக்கு பிடி ஆணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிறுகனூா் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016 ம் ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்த வழக்கு லால்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

இந்த வழக்கில் ஆஜராகுமாறு அப்போதைய சிறுகனூா் காவல் ஆய்வாளரும், தற்போதைய மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளருமான பாலசந்திரனுக்கு நீதிமன்றம் 21 முறை சம்மன் அனுப்பியவும் அவா் ஆஜராகவில்லை.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடந்த வழக்கு விசாரணையின்போதும் பாலசந்திரன் ஆஜராகததால் அவா்மீது லால்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி (பொ ) பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT