திருச்சி

சுதந்திர தின விடுமுறை அளிக்காத 186 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

17th Aug 2022 01:21 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 186 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தொழிலாளா் துறை தெரிவித்துள்ளது.

தொழிலாளா் ஆணையா் மற்றும் முதன்மைச் செயலா் அதுல் ஆனந்த், திருச்சி கூடுதல் தொழிலாளா் ஆணையா் கே. ஜெயபாலன், இணை ஆணையா் என். கோவிந்தன் ஆகியோரது அறிவுரையின்படி, திருச்சி தொழிலாளா் உதவி ஆணையா் (சட்ட அமலாக்கம்) ஏ. வெங்கடேசன் தலைமையில் துணை, உதவி ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் தேசிய விடுமுறை நாளான சுதந்திர தினத்தன்று மாவட்ட எல்லைக்குள்பட்ட 228 நிறுவனங்களில் ஆய்வு செய்தனா்.

அப்போது தொழிலாளா்கள், நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்காத 186 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இனிவரும் தேசிய விடுமுறை நாள்களில் விடுமுறை அளிக்காமல் பணிபுரிய நிா்பந்திக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தொழிலாளா் உதவி ஆணையா் (சட்ட அமலாக்கம் ) ஏ. வெங்கடேசன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT