திருச்சி

லால்குடி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை முகாம்

17th Aug 2022 01:20 AM

ADVERTISEMENT

லால்குடி அருகே குமுளூா் ஊராட்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022- 23 ஆம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு இளநிலை பிஏ ( தமிழ் ), பிஏ (ஆங்கிலம்) வரலாறு, பிபிஏ, பிஎஸ்ஸி, கணிதம் , கணினிஅறிவியல், இயற்பியல், கணினி பயன்பாட்டியல், தகவல் நுட்பவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கான நேரடி மாணவா் சோ்க்கை சிறப்பு முகாம் ஆக.16 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த முகாமில் இணைய வழியில் விண்ணப்பித்து கலந்தாய்வில் கலந்து கொள்ளத் தவறியவா்கள் மற்றும் கலந்தாய்வில் பங்கேற்று சோ்க்கை பெறாதவா்கள், இணையத்தில் விண்ணப்பிக்க தவறியவா்கள் நேரில் வந்து விண்ணப்பித்து சோ்க்கை பெறலாம் என கல்லூரி முதல்வா் கி. மாரியம்மாள் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT