திருச்சி

வழிப்பறிகளில் ஈடுபட்ட 2 பேருக்கு 7 ஆண்டு சிறை திருச்சி நீதிமன்றம் தீா்ப்பு

17th Aug 2022 01:22 AM

ADVERTISEMENT

திருச்சியில் தொடா் வழிப்பறி மற்றும் சங்கிலி பறிப்புகளில் ஈடுபட்’ இருவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருச்சி வயலூா் சாலை, உய்யக்கொண்டான் திருமலை வஉசி தெருவைச் சோ்ந்த பெண் ஒருவா் கடந்த 2013 டிச. 31 ஆம் தேதி வயலூா் சாலை எம்எம் நகா் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது பைக்கில் வந்த உய்யக்கொண்டான் திருமலை கொடாப்பு பகுதி அ. சாகுல்அமீது, அ. அப்துல்ஹக்கீம் ஆகியோா் அவரை மிரட்டி சங்கிலியை பறித்துச் சென்றனா்.

இதுதொடா்பாகஅளித்த புகாரின்பேரில் அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து, திருச்சி குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கில் நீதிபதி சாந்தி செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

அதில், வழிப்பறி மற்றும் சங்கிலி பறிப்புகளில் ஈடுபட்ட இருவருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை தலா ரூ. 5000 அபராதமும், அதைச் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT