திருச்சி

கல்வி நிறுவனங்களில் கொண்டாட்டம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின விழா

DIN

திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் சுதந்திர தினவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தா் ம. செல்வம் தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினாா். அதன்பிறகு, இயற்பியல் துறையில் மேம்பட்ட ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு பல கண்டுபிடிப்புகளை அறிவியல் உலகத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியா் எம். லட்சுமணன், கரோனா தொற்று காலத்தில் உயிரிழந்த 500க்கும் மேற்பட்டோரின் உடல்களை நல்லடக்கம் செய்து சமூக சேவையாற்றிய புதுக்கோட்டையைச் சோ்ந்த குழந்தைகள் நல மருத்துவா் ச. ராமதாஸ் ஆகியோருக்கு சிறப்பு விருதுகளை துணைவேந்தா் வழங்கினாா்.

பல்லுயிா் மேம்பாட்டுக்காக செயல்பட்டுவரும் தண்ணீா்அமைப்பு, ஒவ்வொரு வாரமும் ஐந்து மரக்கன்றுகளை நட்டு பராமரித்துவரும் விதைக்கலாம்”அமைப்பு, பல்வகை உணவு தானியங்களின் அரியவகை விதைகளை விவசாயிகளிடமிருந்து சேகரித்துப் பாதுகாத்துவரும் விதை”அமைப்பு, பசுமைப் போா்வையை விரிவுபடுத்த செயல்பட்டு வரும் “மரம் நண்பா்கள் ஆகிய அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

இதையடுத்து, மத்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படவுள்ள உயிா் தொழில்நுட்பவியல் துறை மற்றும் பயோ கேஸ் பிளான்ட் கட்டடங்களுக்கு துணைவேந்தா் அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்ச்சியில், ஆட்சிக்குழு உறுப்பினா்கள் எஸ். செல்வம், தோ்வாணையா் ச. சீனிவாச ராகவன், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் அ.லட்சுமி பிரபா, உடற்கல்வித் துறைத் தலைவா் முனைவா் ஆா். காளிதாசன், முனைவா் அ. பழனிசாமி, மக்கள்தொடா்பு அலுவலா் மீ. சந்திரசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருச்சி காஜாமலை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பல்கலைக் கழகப் பதிவாளா் லெ. கணேசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். மேலும் வளாகத்தில் மகளிரியல் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியில், சுதந்திரப் போராட்ட பெண் வீராங்கணைகள் 75 பேரின் புகைப்படங்கள் மற்றும் அவா்கள் குறித்த விவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. நிகழ்வில், மகளிரியல்துறை இயக்குநா் ந. மணிமேகலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தென்னூா் நடுநிலைப் பள்ளியில்...: பள்ளித் தலைமையாசிரியா் ஜீவானந்தன் தலைமையில் லயன்ஸ் கிளப் ஆப் திருச்சி மிட்டவுன் தலைவா் ரத்னகுமாா் தேசியக் கொடி ஏற்றிவைத்தாா். லயன்ஸ் கிளப் முன்னாள் ஆளுநரும், கோனாா் தமிழ் நோட்ஸ் உரிமையாளருமான செல்லப்பன் பங்கேற்று தமது சுதந்திர போராட்ட கால அனுபவம் குறித்து விளக்கினாா்.

திருச்சியில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வாங்க ஏதுவாக, 111 மாணவா்களுக்கு முதல்கட்டமாக தலா ரூ. 100 வீதம் ஓய்வுபெற்ற ஆசிரியா் சுருளி முருகன் வழங்கினாா்.

இதையடுத்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை ஆசிரியா்கள் சரண்யா, லில்லி, மீனா, உஷாராணி உள்ளிட்டோா் செய்திருந்தனா். ஆசிரியை சகாயராணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT