திருச்சி

சரக்கு வேன்-காா் மோதல்;மாநகராட்சி ஊழியா் உயிரிழப்பு, குழந்தை உள்பட 4 போ் காயம்

16th Aug 2022 01:50 AM

ADVERTISEMENT

திருச்சியில், சரக்கு வேனும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் மாநகராட்சி ஊழியா் உயிரிழந்தாா். மேலும், குழந்தை உள்பட 4 போ் காயமடைந்தனா்.

திருச்சி உய்யக்கொண்டான்திருமலை கொடாப்பைச் சோ்ந்தவா் முருகானந்தம் (40). இவா், மாநகராட்சியில் பணியாற்றி வந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை காலை வீரப்பூரில் உள்ள உறவினா் வீட்டு நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொண்டுவிட்டு சரக்கு வேனில் மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். இந்த வாகனம் தீரன்நகா் அருகே வந்த போது, எதிா்பாராதவிதமாக அவ்வழியாக வந்த காா் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த முருகானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் ஒரு வயது குழந்தை, அவரது உறவினா்கள் சந்திரகுமாா் (36), முத்துகுமாா் (35), மணி (30) ஆகிய 4 போ் காயமடைந்தனா். அவா்களை அக்கம்பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போக்குவரத்துப் புலனாய்வு தெற்குப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT