திருச்சி

குடிநீா் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

16th Aug 2022 01:49 AM

ADVERTISEMENT

திருச்சியில் குடிநீா் விநியோகம் தடைபட்டதைக் கண்டித்து பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி உறையூா் வள்ளுவா் தெருவில் கடந்த சில தினங்களாக குடிநீா் வரவில்லை. இதுகுறித்து, அப்பகுதியினா் மாநகராட்சி அலுவலரிடம் பலமுறை புகாா் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதையடுத்து திங்கள்கிழமை காலை, உறையூா் டாக்கா்ஸ் சாலை பிரதானப் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த போலீஸாா் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் பொது மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT