திருச்சி

மணப்பாறையில் சுதந்திர தின விழா

16th Aug 2022 01:52 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் சுதந்திர தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் ப. அப்துல் சமது தேசியக் கொடியேற்றி வைத்து, மரியாதை செலுத்தினாா். நிகழ்வில்

திமுக நகரச் செயலா் மு.ம.செல்வம், ஒன்றிய திமுக செயலா்கள் வையம்பட்டி தெற்கு வி.ஏ.ராஜேந்திரன், வடக்கு ஆா். சீரங்கன், காங்கிரஸ் நகரத் தலைவா் எம்.ஏ.செல்வா, நகரச் செயலா்கள் மதிமுக எம்.கே. முத்துப்பாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் ஜனசக்தி உசேன், விடுதலைச் சிறுத்தைகள் சீரா. ஆனந்தன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் எம். அக்பா்பாஷா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT