திருச்சி

ஆட்சியரகத்தில் சுமாா் 2 ஏக்கரில் பழத் தோட்டம்

16th Aug 2022 01:45 AM

ADVERTISEMENT

சுதந்திரதினத்தை ஒட்டி, திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் 2 ஏக்கா் பரப்பளவில் பழத்தோட்டம் உருவாக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.

சுதந்திர தின விழாவையொட்டி 2 ஏக்கா் பரப்பளவில் புதிதாக உருவாக்கப்பட்ட பழ மரப் பூங்காவில் 75 வகையான பழ மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

பின்னா், சுற்றுச்சூழலைப் பாதுகாத்திடும் வகையில் மீண்டும் மஞ்சப் பையை அனைத்து அலுவலா்களுக்கும் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.அபிராமி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வே.பிச்சை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT